சென்னை: கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க நேற்று தமிழக மருத்துவ ஆய்வின் மூலம் கூறப்பட்டுள்ள மிளகு பால் மற்றும் உடலுக்கு வலு சேர்க்கும் கருப்பு கொண்டைக் கடலையும், முக கவசமும் சாலையோர மக்களுக்கு வழங்கப்பட்டது.
கிருமி நாசினி உபயோகப்படுத்தி கைகளைக் கழுவி, சமூக இடைவெளியை ஏற்படுத்தி, முகக் கவசம், மிளகு பால் மற்றும் கருப்பு கொண்டைக்கடலை சாலையோர மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை மதிப்புக்குரிய வளசரவாக்கம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் T. கோவிந்தராஜ் அவர்கள், துவங்கி வைத்தார்.
காவல் ஆய்வாளர் திரு.கோவிந்தராஜ் அவர்கள், கடுமையான ஊரடங்கு அமலில் உள்ள நேற்று, கடுமையான பணி அலுவல்களுக்கிடையே, நேரம் அளித்து, ஏழை எளிய மக்களுக்கு உணவு அளித்து மகிழ்ந்தார். கொரானா தமிழகத்தில் பரவ ஆரம்பத்திலிருந்து, காவல்துறையினர் சிறப்பான பணியினை வெளிப்படுத்தி வருகின்றனர். இத்தடுப்பு பணியில்,பல காவலர்கள் உயிர் தியாகமும் செய்துள்ளனர். தினம் தினம் காவல்துறையினர் கொரானாவிற்கு எதிரான போரில், போராளிகளாக நின்று மக்களை பாதுகாத்து வருகின்றனர்.
முழு ஊரடங்கை நாளான நேற்று, போரூர், ஐயப்பன்தாங்கல், கன்டோன்மென்ட், பூந்தமல்லி, பகுதியில் உள்ள சாலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், மிளகு பால் மற்றும் வேக வைத்த கருப்பு கொண்டை கடலை சுமார் 450 பேருக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு. சார்லஸ் அவர்களின் சொல்லிற்கிணங்க, சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் ஏற்பாடு செய்து இருந்தனர்.