சென்னை: உலகெங்கிலும் கொரோனா பெரும் கொடூரத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கும் வேளையில். இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பற்றிய செய்தியை அறிந்ததும் நாம் அதை விளையாட்டாக எடுத்துக் கொண்டோம். நோயின் நிலைமையின் தீவிரத்தை தாமதமாகவே உணர்ந்து கொண்டாலும். தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவித்த பொது ஊரடங்கிற்குப் பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக இந்நோய் பற்றிய பீதிக்குள் நாம் நுழைந்தோம். அந்த பீதி இன்று வரை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. பல்வேறு இடர்பாடுகளை தாங்கி நாம் அனைவருமே கொரோனாவிற்கு எதிராக ஒருங்கிணைந்து போராடிக் கொண்டிருக்கிறோம்.
கொரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும் கபசுர குடிநீர் அருந்த வலியுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர், ஆடாதொடை மணப்பாகு போன்ற 3 மருந்துகளை சித்த மருத்துவர்கள் மற்றும் ஆயுஷ் துறை பரிந்துரை செய்துள்ளது.
15 வகை அரிய மூலிகைகளை கொண்டு சித்த மருத்துவ முறைப்படி தயாரிக்கப்படும் இந்த கபசுர குடிநீரை வெறும் வயிற்றில் காலை நேரத்தில் பருக வேண்டும். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 15-20 மி.லி.யும் அதற்கு மேல் உள்ளவர்கள் 60 மி.லி.,யும் குடிக்கலாம்.
கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக ஓய்வு உறக்கமின்றி கடுமையாக பணியாற்றிக் கொண்டிருக்கும் நம் காவல்துறை சகோதரர்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முககவசங்களை சென்னை பெருநகர காவல் உதவி ஆணையர் திரு.மகிமை வீரன் அவர்கள் வழங்கி துவக்கி வைத்தார். திறமையும் மனிதநேயமும் கலந்த காவல் உதவி ஆணையர்கள் வெகு சிலரே. அந்த பட்டியலில் மிக சிறப்பாக செயல்பட்டு வருபவர் திரு.மகிமை வீரன். கொரானா தடுப்பு பணியில், இவரின் செயல்பாடு அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது.
பூந்தமல்லி காவல் நிலையம், குமணன்சாவடி மகளிர் காவல் நிலையம், மாங்காடு காவல் நிலையம், Srmc காவல் நிலையம், ராமாபுரம் காவல்நிலையம், கேகே நகர் காவல் நிலையம், வளசரவாக்கம் ராயலா நகர் காவல் நிலையம், விருகம்பாக்கம் காவல் நிலையங்கள் (மற்றும்) காரம்பாக்கம் ஜங்ஷன், போரூர் ஜங்ஷன், ராமாபுரம் ஜங்ஷன், அரசமரம் ஜங்ஷன், ஐயப்பன்தாங்கல் ஜங்ஷன், ராமச்சந்திரா ஜங்ஷன், ரெட்டேரி ஜங்ஷன், குமணன்சாவடி ஜங்ஷன், வளசரவாக்கம் ஜங்ஷன், சாலிகிராமம் ஜங்ஷன், எம்ஜிஆர் நகர் ஜங்ஷன், கேகே நகர் ஜங்ஷன், ஆலப்பாக்கம் ஜங்ஷன் ஆகிய இடங்களில் தொய்வின்றி ஓய்வின்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையின் 500 சகோதரர்களுக்கு வழங்கப்பட்டது.
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு. சார்லஸ் அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில், சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் மக்கள் சேவையை இரவு பகலாக செய்து வருகின்றனர்.