சென்னை: உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய வைரஸான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி லட்ச கணக்கான மக்களை பலி வாங்கி வருகிறது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 23 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் ஏழை எளிய மக்கள் தங்கள் பணிகளுக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி உணவுக்கே வழியின்றி தவித்து வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் தொடர்ந்து நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு. சார்லஸ் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பில் எண்ணற்ற ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து நிவாரண பொருட்கள், உணவு, கபசுர குடிநீர், முககவசங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, சென்னைக்குட்பட்ட போரூர், மாங்காடு, சுல்தான் நகர், மற்றும் குமனன்சாவடி பகுதிகளில் உள்ள சுமார் 350 நபர்களுக்கு கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக, உணவு இல்லாமல் சாலையோரங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கும் மதிய உணவாக வெஜிடபிள் சாதம், தண்ணீர் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது.
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு. சார்லஸ் அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில், சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் பசித்தோருக்கு உணவு வழங்கும் உன்னத பணியினை இரவு பகலாக செய்து வருகின்றனர்.