சென்னை: கொரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும் கபசுர குடிநீர் அருந்த வலியுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர், ஆடாதொடை மணப்பாகு போன்ற 3 மருந்துகளை சித்த மருத்துவர்கள் மற்றும் ஆயுஷ் துறை பரிந்துரை செய்துள்ளது.
15 வகை அரிய மூலிகைகளை கொண்டு சித்த மருத்துவ முறைப்படி தயாரிக்கப்படும் இந்த கபசுர குடிநீரை வெறும் வயிற்றில் காலை நேரத்தில் பருக வேண்டும். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 15-20 மி.லி.யும் அதற்கு மேல் உள்ளவர்கள் 60 மி.லி.,யும் குடிக்கலாம்.
அதன்படி, சென்னைக்குட்பட்ட மாங்காடு, சுல்தான் நகர், மற்றும் குமனன்சாவடி பகுதிகளில் உள்ள சுமார் 350 நபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது. நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு. சார்லஸ் அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில், சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் மக்கள் சேவையை இரவு பகலாக செய்து வருகின்றனர்.