திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 25 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 492 ஆக உயர்ந்து இருக்கிறது.
உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரானா வைரசை ஒழிக்க, அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளை மாநில அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தடுப்பு பணிகளில் மருத்துவம், சுகாதாரம் மற்றும் காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறையினரும் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
வெளிமாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் பணியாற்றி வருகிறார்கள். கொரோனா ஊரடங்கால் அனைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டுவிட்டன. இதனால் புலம் பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள் வேலையின்றி கையில் பணமுமின்றி அவதிப்பட்டு வருகின்றார்கள். வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்றும் கூற்றுக்கு ஏற்ப, வெளி மாநில தொழிலாளர்களுக்கு காவல்துறையினரும், பல்வேறு தன்னார்வலர்களும் உதவி வருகின்றனர்.
வெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு. சார்லஸ் அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில், நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட மகளிர் அணி தலைவி திருமதி.ரமிஜா, பல வெளிமாநில தொழிலாளர்களுக்கு அரிசி, மளிகை மற்றும் காய்கறிகள் வழங்கினார். அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பை பெற்றுக் கொண்ட வெளி மாநில தொழிலாளர்கள் மனதார நன்றி தெரிவித்து பெற்றுச் சென்றனர்.
வறுமையில் வாடுவோர்க்கும், தேவை இருப்போர்க்கும் கொடுப்பதே ஈகை. எதுவும் இல்லை என்றாலும் மகிழ்ந்து, மெழுகாய் உருகி தன்னலம் இன்றி பிறர் நலத்திற்காக உடலை, உயிரை அர்பணித்து தியாக மனதோடு, தனக்கு இல்லாவிட்டாலும் கூட பிறருக்கு, கொடுத்து உதவும் நல்மனதோடு நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட மகளிர் அணி தலைவி திருமதி.ரமிஜா அவர்கள் சேவை செய்து வருகின்றார்.