இராணிப்பேட்டை: நம்மை வீட்டிலேயே இருக்க எச்சரிக்கை விடுத்து விட்டு, தன்னுடைய வீட்டிற்கே போகாமல் நாட்டில் கொரானா பரவாமல், தடுத்து கொண்டிருக்கும் காவலர்கள் பணி போற்றுதற்குரியது.
நாட்டு மக்கள் கொரானாவிற்கு அஞ்சி நடுங்கி, வீட்டிற்குள் அடைந்து உள்ள வேலையில், நாட்டு மக்களுக்காக உயிரை பணயம் வைத்து, பணியாற்றும் மருத்துவர்கள், காவலர்கள் மற்றும் சுகாதார துறை பணியாளர்கள் செயல் பாராட்டுதற்குரியது. போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.
பசி, தூக்கம், குடும்பம் என அனைத்தையும் மறந்து, மக்கள் பணியே, மகத்தான பணி என்று பணியாற்றும் நம் காவலர்கள் நலனுக்காக போலீஸ் நியூஸ் பிளஸ் மாவட்டம் தோறும் உள்ள குடியுரிமை நிருபர்கள் மூலம் காவலர்களுக்கு உணவு, குளிர் பானங்கள், முக கவசங்கள், கை கழுவ சேனிடைசர்கள் உள்ளிட்டவைகள் வழங்கி வருகின்றது.
காவல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் 144 ஊடரங்கிற்காக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், காவல்துறையினர் முதல் பொதுமக்கள் அனைவரும் உணவிற்காக தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு உரிய நேரத்தில் உணவு கிடைப்பதில்லை. இதனை கருத்தில் கொண்டு போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, போலீஸ் நியூஸ் பிளஸ் ராணிப்பேட்டை மாவட்ட நிருபரும், நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் மாநில தலைவர் (ஒளிபரப்பு ஊடக பிரிவு) திரு.பாபு அவர்கள், இன்று அரக்கோணத்தில் பணியில் உள்ள காவலர்களுக்கும் மற்றும் மருத்துவமனையில் பணியாற்றும் பணியாளர்களுக்கும் கடந்த இரண்டு நாட்களாக மதிய உணவு மற்றும் பிஸ்கட் உள்ளிட்டவற்றை வழங்கினார்.
உணவினை பெற்றுக் கொண்ட காவலர்கள் தங்களது மகிழ்ச்சியினை தெரிவித்ததோடு மட்டுமல்லாது, வெகு விரைவாக கொரானா நாட்டை விட்டு நீங்கி, அதனால் 144 தடை உத்தரவு நீங்கி, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று இறைவனை பிராத்திப்பதாக தெரிவித்தனர்.
போலீஸ் நியூஸ் பிளஸின் இச்செயலை, அரக்கோணம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மனோகரன் மற்றும் அரக்கோணம் காவல் ஆய்வாளர் திரு.முத்துராமலிங்கம் ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் மாநில தலைவர் திரு.பாபு அவர்கள் பல ஆண்டுகளாக, காவல் துறையினருக்கு செய்தி வழங்குவதோடு மட்டுமல்லாது, காவலர் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு நலதிட்ட உதவிகளை செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் கும்பினிபேட்டை நேதாஜி இளைஞர் படையை சேர்ந்த இளைஞர்களும் இணைந்து செயல்பட்டனர்.