சென்னை : தமிழ்நாடு அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில் சென்னை மாநகரில் இரவு பகல் பாராமல் நம் பாதுகாப்புக்காக பணியாற்றும் காவல்துறையினருக்கு சரிவர உணவு கிடைப்பதில்லை. இதனை கருத்தில் கொண்டு, நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா தேசிய தலைவரும், போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியருமான திரு. சார்லஸ் அவர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில், நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சமூக சேவை பிரிவு திருவள்ளூர் மாவட்ட தலைவர் திரு. ஐசக், மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர் திரு. ரிஸ்வான் அவர்களும் இணைந்து அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயில் மற்றும் அம்பத்தூர் கேம்ப் சோதனை சாவடி உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்களுக்கு முககவசங்கள், கையுறை, பிஸ்கட் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார்கள். முககவசங்கள் மற்றும் கையுறைகள் சென்னை பெருநகர காவல் உதவி ஆணையர்(அம்பத்தூர்) திரு. கண்ணன் மற்றும் சென்னை பெருநகர காவல் உதவி ஆணையர்(ஆவடி) திரு.சத்தியமூர்த்தி ஆகியோரிடம் வழங்கப்பட்டது.
சென்னை பெருநகர காவல் உதவி ஆணையர்(அம்பத்தூர்) திரு. கண்ணன் மற்றும் சென்னை பெருநகர காவல் உதவி ஆணையர்(ஆவடி) திரு.சத்தியமூர்த்தி ஆகியோர் 144 தடை உத்தரவு பிறப்பித்த நாள் முதல், கொரானா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும், பாதுகாப்பு பணிகளை தீவிரப் படுத்துவதிலும் முனைப்புடன் செயல்படுத்தி வருகின்றனர்.
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா தேசிய தலைவரும், போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியருமான திரு. சார்லஸ் அவர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில், நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சமூக சேவை பிரிவு திருவள்ளூர் மாவட்ட தலைவர் திரு. ஐசக், மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர் திரு. ரிஸ்வான் அவர்களும் இணைந்து வளம்பேடு குப்பத்தை சார்ந்த 21 குடும்பங்களுக்கும், நரசிம்ம புரம் பகுதியை சேர்ந்த 68 குடும்பங்களுக்கும், மணலூர் பகுதியை சேர்ந்த 23 குடும்பங்களுக்கும், திருவேற்காடை சேர்ந்த 30 குடும்பங்களுக்கும், திருநின்றவூரை சேர்ந்த 40 கண்பார்வையற்ற குடும்பத்தினருக்கும், நொலம்பூரை சேர்ந்த 10 குடும்பங்களுக்கும் மற்றும் பெருங்களத்தூரை சேர்ந்த 10 குடும்பங்களுக்கும், உள்ளடக்கிய 200 குடும்பங்களுக்கு தேவையான அரிசி, எண்ணெய், ரவை, உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
இறைவனை வணங்கி வாழ்வதுதான் இறை நம்பிக்கையின் அடையாளம் என்று மட்டும் நினைத்திட வேண்டாம். மக்களுக்கு சேவை செய்வதும் இறை நம்பிக்கையின் ஒரு அடையாளமாக அங்கீகரிக்கப்படுகிறது. மக்களுக்கு செய்யும் சேவை இறைவனுக்கு செய்யும் சேவையாக கருதப்படுகிறது.
அத்தகைய உயரிய சேவையை நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சமூக சேவை பிரிவு திருவள்ளூர் மாவட்ட தலைவர் திரு. ஐசக், ஏழை எளிய மக்களுக்கு வீடு தேடி சென்று உதவுவது பாராட்டுதலுக்குரியது. போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர் திரு. ரிஸ்வான் அவர்கள் கொரானா ஊரடங்கை முன்னிட்டு அம்பத்தூர் பகுதி பொதுமக்களுக்கும் காவலர்களுக்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை, இரவும் பகலும் பாராமல் பணி செய்து வருவது பாராட்டுக்குரியது.