சென்னை: கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக, உணவு இல்லாமல், அத்தியாவசிய பொருள்களை வாங்க முடியாமல் கஷ்டத்தில் இருக்கக்கூடிய மக்களுக்கு நேற்று அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. கம்பர் நகர் 2வது தெரு, ஆலப்பாக்கம் பகுதியில் உள்ள 80 ஏழை குடும்பங்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் காய்கறிகளை வழங்கினார்கள்.
மே மூன்றாம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், ஏழை மக்கள் உணவு இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த 80 ஏழை குடும்பங்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக 2கிலோ அரிசி, 1கிலோ தக்காளி, 1கிலோ கேரட், 1கிலோ பெரிய வெங்காயம், 1கிலோ நூக்கல், ஒரு கட்டு (மல்லி, புதினா மற்றும் கருவேப்பிலை) உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
எனவே கொரானா வைரஸை ஒழிக்க போடப்பட்ட ஊரடங்கு முடியும் வரை மக்கள் அவரவர் வீட்டிலிருந்து, அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதில் ஏராளமான ஏழை பெண்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து அத்தியாவசிய பொருட்களை வாங்கி சென்றனர்.
சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா அவர்கள் ஒரு சிறந்த சமூக ஆர்வலராக செயல்பட்டு வருகின்றார். இயற்கை சீற்றம், தேசிய பேரிடர் சமயங்களில் போலீஸ் நியூஸ் பிளஸ் உடன் இணைந்து மொழி, இனம், மதம் பாராமல் உதவி செய்து வருகிறார்.