சென்னை: கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக, உணவு இல்லாமல் அத்தியாவசிய பொருள்களை வாங்க முடியாமல் கஷ்டத்தில் இருக்கக்கூடிய நடுத்தர வர்க்க மக்களுக்கும் அரிசி மற்றும் அன்றாட தேவையான காய்கறிகள் வழங்கப்பட்டது. போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தி ஊடகம் சார்பாக ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த 100 குடும்பங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை (10.04.2020) அரிசி மற்றும் தேவையான காய்கறிகள் விநியோகிக்கப்பட்டது.
சமூக சேவை செய்பவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் காய்கறிகளை வழங்கினார்கள்.
இறைவனை வணங்கி வாழ்வதுதான் இறை நம்பிக்கையின் அடையாளம் என்று மட்டும் நினைத்திட வேண்டாம். மக்களுக்கு சேவை செய்வதும் இறை நம்பிக்கையின் ஒரு அடையாளமாக அங்கீகரிக்கப்படுகிறது. மக்களுக்கு செய்யும் சேவை இறைவனுக்கு செய்யும் சேவையாக கருதப்படுகிறது.
அத்தகைய உயரிய சேவையை தினசரி வாழ்க்கையில் ஒரு அங்கமாக செய்து வரும், நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின், சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா அவர்களின் சேவைக்கு வாழ்த்துக்கள்.