திருவள்ளூர் : தமிழ்நாடு அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு பகல் பாராமல் நம் பாதுகாப்புக்காக பணியாற்றும் காவல்துறையினருக்கு சரிவர உணவு கிடைப்பதில்லை. இதனை கருத்தில் கொண்டு, நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா தேசிய தலைவரும், போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியருமான திரு. சார்லஸ் அவர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில், நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா திருவள்ளூர் மாவட்ட மகளிர் அணி தலைவி திருமதி. ரமிஜா, மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர் திரு. பக்தவச்சலம் அவர்களும் இணைத்து செவ்வாபேட்டை காவல் நிலையத்தில் உள்ள காவலர்களுக்கும், திருவள்ளூர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலத்தில் உள்ள காவலர்களுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் உணவு வழங்கினார்கள்.
மேலும் கொரானா ஊரடங்கை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கும் காவலர்களுக்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை, இந்தக்குழு இரவும் பகலும் பாராமல் பணி செய்து வருவது பாராட்டுக்குரியது. குறிப்பாக திரு.பக்தவச்சலம் அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.