சென்னை: உலகத்தின் இயக்கமே ஒரு கனம் நின்றதுபோல், ஒரு நொடியில் அனைவரது அன்றாட வாழ்க்கையும் புரட்டிப் போட்டுள்ளது கோவிட் என்று அழைக்கப்படும் கோரானா தொற்றுநோய்.
ஒவ்வொரு இயற்கை பேரிடர்க்குப்பின் ஒரு அமைதி நிலவும். ஆனால் இன்றோ ஆர்ப்பரிக்காமல் உள்நுழைந்த இந்த கிருமி ஒரு மயான அமைதியையே தோற்றுவித்துள்ளது. இந்நோயின் மூர்க்கதாக்கத்தை நினைத்தால் நெஞ்சு பதைபதைக்கிறது.
இனிவரும் காலம் தர்மத்தின் காலம் ஆகட்டும். நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக நேற்று புதன்கிழமை 08.04.2020 சித்த மருந்து- கபசுரக் குடிநீர் மற்றும் முகமூடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் விதமாக பாரதிதாசன் நகர், கம்பர் 2வது குறுக்கு தெரு, ஆலப்பாக்கம், மதுரவாயல் பகுதியில் வசிக்கும் 150 மக்களுக்கு, தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அறிவுறுத்தலின் படி சித்த மருந்து கபசுரக் குடிநீர் போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தி ஊடகம் சார்பாக கொடுக்கப்பட்டது.
இப்பொழுது சித்த மருத்துவர்கள் அனைவரும் பொதுமக்களுக்கு வழங்கிவரும் ஆலோசனைகள் எல்லோரும் பச்சைக் காய்கறிகள், பழங்கள், கபசுர குடிநீர், தூதுவளை, நிலவேம்பு கசாயம், சுக்கு மிளகு போன்ற நமது பாரம்பரிய இயற்கை மருத்துவத்தை நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதற்கு மேலே குறிப்பிட்டுள்ள உணவு வகைகளை சாப்பிடுமாறு சொல்கிறார்கள். மேலும்
நினைவில் கொள்ள சில எளிய யோசனைகள்!!!
1.இளம் சூடான நீரை குறுகிய இடைவெளியில் அருந்தவும்
2.இருமுறை நீராவியால் சுவாச பாதைகளை ஆசுவாசப்படுத்தவும்.
3.இயன்றவரை உடலையும் அக்கம் பக்கத்தையும் சுத்தமாக பேணிக் காக்கவும்.
4.தனிமையை விரும்பும் ஞானிகளைப் போல கூட்டத்தை தவிர்த்து பணியை தொடருங்கள்.
இந்த கொரோனா அச்சம் நம்மை விட்டு நீங்கிய பிறகும் நமது பாரம்பரிய இயற்கை உணவுகளையும், நமது சித்த ஆயுர்வேத மருந்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சித்த மருத்துவர்கள் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.
இருள் படர்ந்த இந்த இக்கட்டான தருணத்தில், தனது மக்களை பிணி அண்டாமல், காக்கவேண்டி இரவு பகல் பாராமல் உணவின்றி, உறக்கமின்றி, விழிகளைக் காக்கும் இமைகள் போல சாதாரண குடிமக்களின் வாழ்வாதாரத்தை காக்க போராடி வரும் காவல்துறையினர் அவர்களின் தியாகத்தை நினைவில் நிறுத்தி, இந்த நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக D-4 மதுரவாயல் காவல் நிலையம் (குற்றப்பிரிவு) காவல் ஆய்வாளர் திரு. என். ரவிந்திரன் அவர்கள் அழைக்கப்பட்டு, நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். அவர்களுக்கு எங்கள் போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தி ஊடகம் சார்பாக மனமார்ந்த நன்றி.
காவல்துறையில் மிக சவாலான பிரிவு குற்றப்பிரிவு. ஏனெனில், மக்கள் இழந்துள்ள விலையுயர்ந்த பொருட்களை மீட்டுக் கொடுக்கும் கடினமான பணியில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.என்.ரவிசந்திரன் அவர்கள் பணியாற்றி வருகின்றார்.
மதுரவாயில் குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு.ரவிச்சந்திரன், பொதுமக்கள் திருடர்களிடம் இழந்துபோன பொருட்களை, திருடர்களிடமிருந்து மீட்டெடுத்து, பொதுமக்களிடம் ஒப்படைத்து வருகிறார். மதுரவாயில் மக்கள் அவர் செய்யும், இந்த நல்ல காரியங்களை போற்றிப் புகழ்ந்து வருகின்றனர்.
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின், தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
குறிப்பு:- இந்த நிகழ்ச்சி தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி, பொது மக்கள் ஒருவருக்கொருவர் உரசாமல், தூரத்தை பேணு மாறும்இ கைகளில் சுத்திகரிப்பு திரவத்தை உபயோக்கும் முறைகளையும் மற்றும் தொற்றுநோய் பரவாமல் இருக்க மூக்கினை மறைக்கும் கவசம் பயன்படுத்தும் முறைகளையும் அறிவுறுத்தப்பட்டது.
சிறப்பு குறிப்பு:- இந்த நிகழ்ச்சி நடைபெற்ற பகுதிகளில் சுத்தம் செய்து கொடுத்த நமது தமிழ்நாடு அரசு தூய்மைப் பணியாளர்களின் ஆரோக்கியத்திற்காகவும் அவர்களது குடும்பத்தினர் ஆரோக்கியத்திற்காகவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
வாழ்க காவலர்கள் ! வளர்க காவல்துறை !