கோவை : கொரானா தொற்று காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவினால் காவல்துறையினர் அன்றாடம் ஆயிரக்கான மக்களை சந்திக்க வேண்டியுள்ளது. அவர்களை கொரானா நோய் தாக்காமல், பாதுக்காக்கும் பொருட்டு, போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக முக கவசங்கள் வழங்கப்பட்டது.
சேலம் மண்டல மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் கண்காணிப்பாளர் திரு.சிவக்குமார் அவர்களிடம் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக காவலர்கள் பயன்படுத்த முககவசங்கள் வழங்கப்பட்டது. காவல் கண்காணிப்பாளர் திரு.சிவக்குமார் அவர்கள் வடுகம் சிவக்குமார் என அனைவராலும் அறியப்படுவர். இவரின் கவிதைகள் மிகவும் பிரபலமானவை, பாடல்களாகவும் வெளிவந்துள்ளன.
இவர் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியில் இருந்த போது, ஈரோடு மாவட்ட மக்களின் அன்பை பெற்றவர். இவரை சென்னை பெருநகர காவல்துறை போக்குவரத்துப் பிரிவு மேற்கு மண்டல துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து ஈரோடு மாவட்ட மக்கள் குரல் எழுப்பினர். காவலர்கள் மீதும் இயற்கை மீதும் மிகுந்த அக்கறை கொண்டதாக இவரின் கவிதை தொகுப்புகள் இருக்கும்.
தனக்கு கீழ் பணியாற்றும் காவல்துறையினருக்கு இவர் கூறும் அறிவுரை, வாகன சோதனையில் ஈடுபடும் போது பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொள்ள கூடாது. வாகனத்தை நிறுத்த சொல்லும் போது அவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ நிற்காமல் போய் விட்டால் அவர்களை துரத்தக்கூடாது. அந்த வாகனத்தின் பதிவு எண்ணை குறித்து கொண்டு பிறகு விசாரிக்க வேண்டும். மேலும் வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார் கடுமையாகவோ, கோபமாகவோ நடக்க கூடாது. மென்மையை கடைப் பிடிக்க வேண்டும் என்று கூறுவார்.
இவர் தற்போது பணியாற்றும், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவிலும், இவரின் செயல்பாடுகள் மற்றும் இவர் நிகழ்த்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என சேலம் மாவட்ட காவல்துறையினரையும், பொதுமக்களையும் கவர்ந்துள்ளார்.
கோவை மாவட்ட மதுவிலக்கு துணை கண்காணிப்பாளர் திரு.எழிலரசன், காவல் ஆய்வாளர் திரு.பாஸ்கரன், கோவை மாநகர மதுவிலக்கு ஆய்வாளர் திரு.கணேசன், உதவி ஆய்வாளர் திரு.கந்தசாமி, சிஆர்ஐ பம்ப் நிறுவனத்தின் மேலாளர் திரு.ராஜா மற்றும் மதுவிலக்கு காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின், தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, முக கவசத்தை நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் கோவை மாவட்ட பொது செயலாளர் (பொதுக்குழு) திரு.கோகுல் மற்றும் அவர்கள் வழங்கினார்கள்.
கோவை மாவட்டத்தில் சோதனை சாவடிகளில் பணிபுரியும் காவலர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக முக கவசங்களை மாவட்டத்தின் நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் கோவை மாவட்ட பொது செயலாளர் (பொதுக்குழு) திரு.கோகுல் மூலமாக அனைத்து காவலர்களுக்கும் வழங்கப்பட்டது.