சென்னை: உலகை அச்சுறுத்திய கொரானா என்ற பெயர் கடந்த ஆண்டு நம் வாழ்வை வெகுவாக புரட்டி போட்டுவிட்டது என்றே சொல்லலாம். சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய இந்த கண்ணுக்கு தெரியாத வைரஸ், இன்று உருமாறி, உருமாறிய கொரானாவாக பிரிட்டனிலிருந்து பரவ தொடங்கியுள்ளது.
இந்த வருடமும், நம்மை நோயிலிருந்து பாதுகாத்து கொள்ள வேண்டுமெனில், தனிமனித இடைவெளியும், நோயினை எதிர்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியும் அவசியமாகின்றது. அதற்காக தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் பயன்படக்கூடிய கபசுர குடிநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, கடந்த சில மாதங்களாக தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.கபசுர குடிநீரும், முககவசமும் நம் காவல்துறையினரின் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரங்களும் தமிழகத்தில் கொரானா குறைந்துள்ளது.
சென்னை சாலிக்கிராமம், தசரதபுரம் போலீஸ் பூத், மீன் மார்க்கெட் மற்றும் மஜீத் நகர் ஆகிய
பகுதிகளில் நேற்று (10.01.2021) காலை 8:30 மணியளவில், கொரோனா காய்ச்சலை கட்டுப்படுத்தும் 15 வகை அரிய மூலிகை கொண்டு தயாரிக்கப்பட்ட சித்தமருந்து கபசுர குடிநீர் சமூக இடைவெளி வட்டமிட்டு மக்களை வரிசைப்படுத்தி சனிடைசர் மூலம் கைகளை சுத்தப்படுத்திய பின்பு 1200 நபர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. முக கவசமும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் வழங்கப்பட்டது. சிறுவர் சிறுமிகளுக்கு கபசுர குடிநீர்வுடன் முக கவசம் மற்றும் இனிப்பும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை துவங்கி வைத்த சிறப்பு அழைப்பாளர் வடபழனி சரகம் காவல் உதவி ஆணையர்
திரு.P. ராஜேந்திரன் கலந்து கொண்டு கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கினார். காவல்துறையின் சிரமமான அலுவல் பணிகளுக்கிடைய போலீஸ் நியூஸ் பிளசுடன் இணைந்து மக்கள்சேவையில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காவல் உதவி ஆணையர் P. ராஜேந்திரன், கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்கும் நோக்கத்துடன் பொதுமக்கள் அனைத்து முக கவசம் அணிவதின் முக்கியத்துவத்தையும் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார். கொரானா ஊரடங்கில் காவல் உதவி ஆணையர் திரு. P. ராஜேந்திரன் அவர்கள் சிறப்பாக பணியாற்றி, அப்பகுதி மக்களை நோயிலிருந்து பாதுகாக்க, தீவிர ரோந்து பணி, வாகன சோதனை, விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலமாக சீரிய முறையில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு. சார்லஸ் அவர்களின் ஏற்பாட்டின் அடிப்படையில், சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் ஒருங்கிணைப்பு செய்து இருந்தனர்.