சென்னை: காவல்துறை இயக்குநர் (தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் துறை) டாக்டர் திரு.பிரதீப் வி. பிலிப், IPS மத்திய அரசின் உயரிய விருதான ஸ்கோச் விருதுகளைப் பெற்றுள்ளார். பிரண்ட்ஸ் ஆப் போலீஸ், மற்றும் உங்கள் குற்றவாளிகளைத் தெரிந்து கொள்ளுங்கள் திட்டங்களுக்காக 2 ஸ்கோச் விருதுகள் கடந்த 29.11.2019 ஆம் தேதி பெற்றார்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் சிறப்பு ஜூரிக்கள் மற்றும் வாக்கெடுப்பு முறை மூலம் தேர்வு செய்யப்படும் ‘ஸ்கோச்’ விருதுகள் பல்வேறு பிரிவுகளின் கீழ், ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. அரசின் துறைகளில் மக்கள் சேவை, சிறந்த முன் மாதிரிக்காக தங்க விருது மற்றும் ஆர்டர் ஆஃப் மெரிட் (Order of Merit) விருதுகள் வழங்கப்படுகிறது.
டாக்டர். பிரதீப் வி பிலிப், IPS அவர்கள் இன்று புதுடெல்லியில் அரையிறுதி மாநாட்டில் காவல்துறை நண்பர்கள் (FOP) மற்றும் குற்றவாளியை தெரிந்து கொள்ளுங்கள் (KYC) என்ற இரண்டு பிரிவுகளின் கீழ் தகுதி சான்றிதழ் பெற்றுக் கொண்டார். மேலும் அன்றைய தினம் நடைபெற்ற ஸ்காட்ச் விருது 2019 அதற்கான போட்டியில், நாடு முழுவதும் உள்ள அனைத்து துறை நிர்வாகம் சார்ந்த 150 நியமனங்களில் இருந்து, காவல்துறை நண்பர்கள் இயக்கம் என்ற திட்டம் நடுவர்களும், முக்கிய பிரமுகர்களின் வாக்களிப்பாலும், தேர்வாகி தங்க பிரிவு விருதை பெற்றது.
இதனை கடந்த 02/12/2019 அன்று மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.பழனிசாமி அவர்ளை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் உறுப்பினர்கள் அனைவரும் தங்களது மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
சாதனை நாயகன், டாக்டர். பிரதீப் வி பிலிப்,IPS அவர்களின் இந்த விருது தமிழக காவல்துறையை உலகறிய செய்துள்ளது. திக்கற்ற பல்லாயிரம் இளைஞர்களின் வாழ்வை ஏற்றம் அடைய செய்த டாக்டர். பிரதீப் வி பிலிப், IPS அவர்கள் பெயர் காவல்துறை சரித்திரத்தில் நீங்கா இடம் பிடித்துவிட்டது.
பலரது வாழ்வை பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற அமைப்பின் மூலம் ஏற்றம் அடைய செய்த, காவல்துறை இயக்குநர் டாக்டர் திரு. பிரதீப் வி பிலிப் அவர்களை நேற்று நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா தேசிய தலைவரும், போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியருமான திரு.அ.சார்லஸ் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சினி மீடியா குடியுரிமை நிருபர் திருமதி.சார்மிளாவும் டாக்டர். பிரதீப் வி பிலிப்,IPS அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
சார்மிளா ஒரு பிரபலமான சினிமா நடிகை ஆவார். இவர் மலையாள திரை உலகில் சூப்பர் ஸ்டார். தமிழ் மற்றும் கன்னடம் மொழி படங்களில் நடித்து வருகிறார். சார்மிளா அவர்கள் மலையாளம் மொழி படங்களில் 38 படங்களில் நடித்துள்ளார். இவரை அறிமுகப்படுத்தியவர் தமிழ் திரை உலகின் பழம்பெரும் நடிகர் திரு.எஸ்.எஸ். ராஜேந்திரன் அவர்கள் ஆவார். இவர் மோகன்லால் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் ஒரு மணி நேரம் நிகழ்ந்த சந்திப்பில், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பற்றியும், அதன் வளர்ச்சி குறித்தும், விவாதிக்கப்பட்டது. பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் தமிழ் இணையதளம் FOP 25 ஆம் ஆண்டு நிறைவு அடைந்ததை முன்னிட்டும், டாக்டர். பிரதீப் வி பிலிப்,IPS அவர்களின் பிறந்தநாளை நினைவு கூறும் வகையிலும் இணையதளம் (www.friendsofpolice.in) துவங்கப்பட்டது. விரைவில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் தமிழ் இணையதளம் புது பொலிவுடன் வெளியாக உள்ளது.
நடிகை சார்மிளாவை தொடர்ந்து, பல சினிமா பிரபலங்களும், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினை, மக்கள் மத்தியில் விளம்பர செய்ய நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா தேசிய தலைவரும், போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியருமான திரு.அ.சார்லஸ் அவர்களிடம் விருப்பம் தெரிவித்துள்ளனர். பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினை மேன்மேலும் வலுப்படுத்திட, போலீஸ் நியூஸ் பிளஸ் முனைப்புடன் செயல்படும்.
தற்போது பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் இந்தியாவின் பிற மாநிலங்களில் துவங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இதனை பன்னாட்டு காவல்துறையிலும் செயல்படுத்த திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றது.
போலீஸ் நியூஸ் பிளஸ் அனைத்து குடியுரிமை நிருபர்கள் சார்பாக டாக்டர். பிரதீப் வி பிலிப்,IPS அவர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.