நாகை : நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் போலீஸ் சூப்பிரண்டு திரு.ஜவஹர் தலைமையில் நடைபெற்று துணை போலீஸ் சூப்பிரண்டு திரு.பிலிப் பிராங்கிளின்கென்னடி முன்னிலை வகித்தார். முகாமில் 14 மனுக்களை பெறப்பட்டது. இதில் 7 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு திரு.ஜவஹர், கூறுகையில் பொதுமக்கள் போலீசாரிடம் நேரடியாக வந்து தங்களது குறைகளை தெரிவிக்கலாம். சாராய விற்பனை, கஞ்சா விற்பனை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பிரச்சினைகள் குறித்து புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். அவசர உதவிக்கு 10581 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றார்.