வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் மோர்தானா அணையில் இருந்து நேற்று இரவு வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறியது. இந்த தண்ணீர் குடியாத்தம் நகரின் மையப்பகுதியில் செல்லும் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் செல்கிறது. போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டால் நெரிசல் இல்லாமல் சீராக போக்குவரத்து நடைபெற செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து, நேற்று மாலை வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.ராஜேஷ் கண்ணன் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.