கோவை : கோவையில் உள்ள போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு நேற்று ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர் கோவையில் குனியமுத்தூர், பெரியகுளம் பகுதிகளில் வெடிகுண்டுவைத்திருப்பதாக கூறினார் .போலீசார் சோதனைநடத்தியபோது அது வெறும் புரளி என்பது தெரியவந்தது.இதுகுறித்து குனியமூத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது …போலீசார் வழக்கு பதிவு செய்துகுனியமுத்தூர் கிழக்கு சுகுணாபுரம், செந்தமிழ் நகரைச் சேர்ந்த பீர் முகம்மது என்ற பச்சைமிளகாய் (வயது 40) என்பவரை கைது செய்தனர் .இவர் குடிப்பழக்கம் உடையவர்.போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக இவர் ஏற்கனவே 5 தடவை கைது செய்யப்பட்டுள்ளார்.