மதுரை: மதுரை போலீஸ் உளவாளி என சந்தேகித்து ஒருவர் மீது மதுபாட்டிலால் தாக்குதல் நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தெற்கு ஆவணி மூல வீதி மாதர்கான் டபேதார் தெருவைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி 42. அதே பகுதியை சேர்ந்தவர் சோலையப்பன் மகன் முருகன் 29.இவரும் இவரது நண்பர்களான அருண், எல் டி ராஜா, ரமேஷ் ஆகிய 4 பேரும் முத்துப்பாண்டியை போலீஸ் உளவாளி என்று நினைத்து அவருடன் தகராறில் ஈடுபட்டனர்.
பின்னர் அவரை சரமாரியாக மது பாட்டிலால் அடித்து தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து முத்துப்பாண்டி தெற்குவாசல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தனர். மற்ற மூவரையும் தேடி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி