கோவை: போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்படும்போது ஒரே மண்டலத்திற்கு உள்ளேயே மாற்றம் செய்யப்படுவது வழக்கம். முதல்முறையாக கோவை மாநகர் மற்றும் புறநகர் போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரிந்த பெரும்பாலான இன்ஸ்பெக்டர்கள் மேற்கு மண்டலத்தில் இருந்து தெற்கு மற்றும் மத்திய மண்டல போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள துடியலூர் இன்ஸ்பெக்டர் திரு.பால முரளி சுந்தரம் ,கருமத்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.சண்முகம், தொண்டாமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.சிவக்குமார், பேரூர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் திரு.பாலமுருகன், சூலூர் இன்ஸ்பெக்டர் திரு.முருகேசன், ஆலந்துறை இன்ஸ்பெக்டர் திரு.பாஸ்கரன், பொள்ளாச்சி இன்ஸ்பெக்டர் திரு.விஜயன், நெகமம் இன்ஸ்பெக்டர் திரு.வெற்றிவேல் ராஜன்,
குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியார், புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் திரு.மணிவர்மன், ஆர்எஸ் புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.கனகசபாபதி, போத்தனூர் இன்ஸ்பெக்டர் திரு.முரளிதரன், சிங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் திரு.சுந்தரபாண்டியன்,
உளவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் ராபி திரு.சுஜின் ஜோஸ், கோவை இன்ஸ்பெக்டர் திரு.ராஜ்குமார் ஆகியோர் தென் மாவட்டங்களுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். பெரும்பாலான இன்ஸ்பெக்டர்கள் கோவை நகரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.