கோவை : கோவை சரவணம்பட்டி அருகே நேற்று கார்த்திகா என்ற மாணவி படுகொலை செய்யப்பட்டார் இதை கண்டித்து வீர முத்தரையர் அமைப்பின் சார்பில் கோவை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடம் அருகே கோவை மாவட்ட வீர முத்தரையர் அமைப்பின் சார்பில் நடுரோட்டில்திடீர் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது அங்கு சென்ற ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜாபர் அலி அவர்கள்கலைந்து செல்லுமாறு கூறினார். ஆனால் அவர்கள் அவரை பணி செய்ய விடாது தடுத்து அவரிடம்’தகராறு செய்தனர் இதுகுறித்து அவர்ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கோவை மாவட்ட வீரமுத்தரையர் அமைப்பை சேர்ந்த முருகேசன் உட்பட 15 பேர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்கள்.