கோவை : போலீஸ் அதிகாரியை அரிவாளால் வெட்டிய பிரபல கொள்ளையன் இன்று கைது. கோவையில் அடிக்கடி இரு சக்கர வாகனங்கள் திருட்டு போனது இதை கண்டு பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவின்பேரில் துணை போலீஸ் கமிஷனர் உமா மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன கோவையில் பல்வேறு இடங்களில் இரவு பகலாக ரோந்து சுற்றி வந்தனர் நேற்று இரவு சந்தேகத்தின் பேரில் ஒருவனை பிடித்து விசாரித்தபோது அவன் பைக் திருடும் கொள்ளையன் என்பது தெரிய வந்தது இவனிடம் விசாரணை நடத்தியதில் இவன் திருட்டு வழக்கு தொடர்பாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவன் என்பது தெரியவந்தது இவன் கோவை செல்வபுரம் அசோக் வீதியிலுள்ள சுப்பையா லே அவுட்டைசேர்ந்த அன்வர் மகன் ஆசிக் (வயது 28) இவனிடமிருந்து 5 புதிய பைக்குகள் மீட்கப்பட்டுள்ளன இவன் புதிய பைக்குகளை மட்டும்தான் திருடுவானாம். மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பழனி அருகே ஒரு குற்ற வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகநயினார் என்பவர் இவனை தேடி சென்றபோது அவரது முகத்தில் அரிவாளால் வெட்டி விட்டு ஓடிவிட்டான்’ இவன் மீது ஏற்கனவே கொலை முயற்சி வழக்கும் 15 திருட்டு வழக்குகளும்உள்ளது இவன் கொரோனா பாதிப்பு காலத்தில் வால்பாறையில் தங்கியிருந்தானாம் கடந்த மாதம்தான் கோவைக்கு வந்து மீண்டும் திருட்டுத் தொழிலை ஆரம்பித்து உள்ளான் இவனது கூட்டாளிகள் சிலரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்