திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும், குறிப்பாக பெண்கள் மற்றும் இருபாலர் பயிலும் 40 கல்லூரிகளில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.(Agri)., அவர்களின் உத்தரவின்படி “போலீஸ் அக்கா” என்ற பெண்களுக்கான திட்டம் துவங்கப்பட்டு ஒவ்வொரு கல்லூரியிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு சீனியர் பெண் காவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் தொலைபேசி எண் கல்லூரியில் பயிலும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளுக்கு பகிரப்பட்டுள்ளது. கல்லூரியில் பயிலும் மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தங்களது பெற்றோரிடத்திலும், நண்பர்களிடத்திலும் பகிர்ந்து கொள்ள முடியாத விஷயங்களை “போலீஸ் அக்கா” திட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள பெண் காவலரிடம் தங்களது சகோதரியாக நினைத்து தெரிவிக்கலாம்.
அதன்படி (12.11.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc., (Agri)., அவர்கள் திருவாரூர் ராபியம்மால் அஹமது மைதீன் பெண்கள் கல்லூரியில் “போலீஸ் அக்கா” திட்டத்தினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள். அப்போது, பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் “போலீஸ் அக்கா” திட்டத்தின் மூலம் மாணவிகள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை அல்லது குற்ற சம்பவங்கள் நடைபெறுவது தெரிய வந்தால் தங்கள் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள “போலீஸ் அக்கா” தொடர்பு எண்ணில் உடனடியாக தெரிவிக்கலாம் என்றும். “போலீஸ் அக்கா” திட்டம், மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதையும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கமாக கொண்டுள்ளது எனவும், துன்புறுத்தல் அல்லது பாதுகாப்பற்ற சூழ்நிலைகளில் மாணவர்கள் தங்களின் பிரச்சனைகளுக்கு பெற்றோர்கள், நண்பர்கள் அல்லது கல்லூரி நிர்வாகத்தை அணுக தயங்கினால் “போலீஸ் அக்கா” திட்டம் மூலம் பெண் காவலர்களை தொடர்பு கொண்டு உடனடியாக உதவி பெறவும் அறிவுறுத்தினார்கள் .
சாலை விபத்துக்கள் அதிக அளவில் நடைபெறுவதால் அனைவரும் கட்டாயம் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும், இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணிந்தும், நான்கு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது Seat belt அணிந்து செல்ல வேண்டும் என்றும்,போதைப்பொருட்களுக்கு எதிரான உலகை அமைக்க இளைஞர்களின் பங்கு இன்றியமையாதது, மேலும் கல்லூரி மாணவ, மாணவியராகிய நீங்கள் போதைப்பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிராக போதைப்பொருட்களின் தீமைகள் குறித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எடுத்துத்துரைக்க வேண்டும் என்றும், அறிவுறுத்தினார்கள். மேலும், சைபர் க்ரைம் குற்றங்களால் பாதிக்கப்பட்டதாக அறிந்தால் உடனடியாக 1930 என்ற உதவி எண் மற்றும் www.cybercrime.gov.in -ல் புகார் அளிக்குமாறு தெரிவித்தார்கள்.