சென்னை: தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு வந்த மின்சார ரெயிலில் இன்று காலை, மேலகோட்டையூர் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் திரு.மோகன் 41 என்ற ஆயுதப்படை காவலர்
பயணம் செய்தார்.அவர் சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில், ரெயில் மெதுவாக வந்து கொண்டிருந்தபோது இறங்கினார். அப்போது தவறி கீழே விழுந்தார்.
உடனடியாக சென்னை அரசு மருத்துவமனைக்கு அவரை ரெயில்வே ஊழியர்கள் கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே திரு.மோகனின் உயிர் பிரிந்து விட்டது. இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து காலை 8 மணியளவில் நடந்தது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்