இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி கிரண் ஸ்ருதி அவர்களின் உத்தரவின் படியும் அரக்கோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் அவர்கள் அறிவுரையின்படி அரக்கோணம் நகர காவல் ஆய்வாளர் தங்குகுருநாதன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி காவல் ஆய்வாளர் மற்றும் உதவியாளர்கள் நாராயணசாமி சிரஞ்சீவிலு ஆகியோர் தலைமையிலான போலீசார் அரக்கோணம் அடுத்த வெங்கடேசபுரம் கிராமத்தில் பாபு என்பவரது வீட்டின் பின்புறம் சோதனை செய்ததில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 52,000 ரூபாய் மதிப்புள்ள52. 5KG குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளி பாபு (வ/38). த/பெ செல்லதுரை எண்.609/ 335 பிள்ளையார் கோவில் வெங்கடேசபுரம் அரக்கோணம் தாலுகா இராணிப்பேட்டை மாவட்டம் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்