திருவண்ணாமலை: தமிழக அரசாங்கம் கடந்த 10ஆம் தேதி முதல் வரும் மே 24-ம் தேதி வரை ஊரடங்கை அறிவித்துள்ளது..காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே காய்கறி, மளிகை கடை, இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது.
மேலும் வாகன ஓட்டிகள் தேவையில்லாமல் தங்களது வாகனங்களில் சுற்றி வந்தனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் வாகன சோதனையை கடுமையாக்கினர். டிஎஸ்பி கோட்டீஸ்வரன் தலைமையில்,பயிற்சி டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன்,ஆய்வாளர் சுப்பிரமணியன்,உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அத்தியாவசிய தேவைகள் இன்றி இருசக்கர வாகனங்களில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த இளைஞர்களை பிடித்து தோப்புக்கரணம் போட வைத்து நூதன தண்டனை வழங்கினர். பின்னர் அவர்களிடம் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து விளக்கமளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.