சேலம்: தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையிலும் கடந்த நான்கு தினங்களாக இருசக்கர வாகனங்கள் போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது . மாவட்ட காவல் துறை சார்பில் இன்று காலை முதல் போலீசார் தருமபுரியின் பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். நகரப்பகுதியில் அதிக அளவு ஆட்கள் நுழைவதைத் தடுக்க அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பென்னாகரம் மேம்பாலம் மற்றும் குமாரசாமிபேட்டை. தருமபுரி 4ரோடு பகுதிகளில் போலீசார் சாலையில் தடுப்புகளை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ள போலீசார் முன் களப்பணியாளர்கள் மருத்துவர்கள் அரசு அலுவலர்களை மட்டுமே தர்மபுரி நகர பகுதிக்குள் அனுமதிக்கின்றனர். நோயுற்ற நபர்கள் மருத்துவமனைக்கு செல்லவும் முதியோருக்கு அவசர மருந்துகள் வாங்கவும் உரிய சான்றுகள் வைத்துள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கின்றனர். சில இளைஞர்கள் ஊர் சுற்றுவதற்கு இருசக்கர வாகனத்தில் வழக்கம்போல சுற்றி வந்த நிலையில் இன்று போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதை அறியாமல் போலீசிடம் சிக்கி அபராதம் கட்டிய பின்பு போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர். தருமபுரி நகரப்பகுதியில் நான்குபுறமும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்