செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி, செப்.12.வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரே பாதையை தடுத்து ரயில்வே துறையினர் தண்டவாளத்தை ஒட்டியபடி வழிநெடுக கற்கள் நடுவதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு போராட்டம் நடத்தினர். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 50 பேரை போலீசார் கைது செய்ய முயன்றதால் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா எதிரே காலம் காலமாக பொதுமக்கள் பொது வழியை பயன்படுத்தி வருகின்றனர். இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் அன்றாடம் வேலைக்கு சென்று வருவோம் என அனைத்து தரப்பு பொதுமக்களும் ரயில்வே தண்டவாளத்தை கடந்து எளிதில் போக்குவரத்து செய்து வந்தனர். இதில் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது சிலர் ரயிலில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவமும் அடிக்கடி அரங்கேரி வந்தது. இதனை தடுக்கும் விதத்தில் ரயில்வே துறையினர் தண்டவாளம் ஒட்டியபடி வழிநடிகளும் கற்களை நட்டு வருகின்றனர்.
இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்களிடம் இன்று காலை கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கற்கள் நடும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீஸ் உதவி கமிஷனர் ராஜீவ்பிரின்ஸ்ஆரோன், ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வானவாமலை மற்றும் போலீஸ் எடுத்து விரைந்து வந்து ரயில்வே ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் எட்டாததால் வண்டலூர் ஊராட்சி மன்ற முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஜெகன்தேவேந்திரன், கிராம நல சங்க தலைவர் பூபாலன் உட்பட பொதுமக்கள் 50 பேரை போலீசார் கைது செய்வதற்காக வேனில் ஏற்ற முயன்றனர்.
பின்னர் போராட்டக்காரர்களிடம் போலீசார் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், வண்டலூர் ஊராட்சியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில் ஓட்டேரி விரிவு மற்றும் டி எஸ் நகர் பகுதியில் உள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் அன்றாடம் வேலைக்கு சென்று வருவார் என அனைத்து தரப்பு மக்களும் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா எதிரே உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்து பள்ளி கல்லூரி அலுவலகப் பணிக்கு சென்று வருகின்றனர். மேலும் 12 டி சாலையின் காலம் காலமாக இருந்து வருகிறது. ஆனால் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் ரயில்வே துறையினர் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய பொது வழியை மூடும் வகையில் தண்டவாளத்தை ஒட்டியபடி வழிநெடுகளும் கற்களை நட்டு வருகின்றனர்.
இதனால் எளிதில் சென்று வந்த மாணவர்கள் மட்டும் பொதுமக்கள் வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கத்தில் உள்ள ரயில்வே மேம்பாலத்திற்கு இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை சுத்தி வரவேண்டும். இதனை தடுத்து நிறுத்த கோரியும், இப்பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தியும் ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்து வலியுறுத்தியுள்ளோம். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்துவோம் என்றனர். அப்போது ஒரு வாரம் கால அவகாசம் கொடுக்கின்றோம். அதற்குள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் சென்று மனு கொடுத்து முறையிடுங்கள். அதுவரை பொதுமக்கள் செல்வதற்காக தற்காலிகமாக ஒரு வழி பாதையை அமைத்து தருகிறோம் என்றனர். இதனை அடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர். இதனால் வண்டலூர் ஊராட்சியில் இன்று காலை வெறும் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்