கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. சக்திகணேசன் IPS அவர்களின் அறிவுரையின்படி கடலூர் துறைமுகம் லாஞ்சடியில் மீன் வாங்க பொதுமக்கள் அதிகளவில் வருவார்கள் எனக்கருதி லாஞ்சடியில் வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு லாஞ்சடியில் வெளியே நிறுத்தப்பட்டது.
கடலூர் துறைமுக காவல் உதவி ஆய்வாளர் திரு. ராஜாங்கம் அவர்களின் தலைமையிலான போலீசார் ஒலிபெருக்கி மூலம் மீன் வாங்க வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையான சமூக இடைவெளியை கடைபிடித்து, முககவசம் அணிந்து வருமாறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.