திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் மேற்பார்வையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு கொலை, கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் தொடர்புடைய இடங்களில் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விடிய, விடிய அதிரடி சோதனை நடத்தப்பட்டது. திருவாரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.P.மணிகண்டன், நன்னிலம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.P.தமிழ்மாறன், மன்னார்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.A.அஸ்வத் ஆண்ட்டோ ஆரோக்கியராஜ், முத்துப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.M.ராஜா ஆகியோர் தலைமையில் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் அடங்கிய தனிப்படையினரால் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
குறிப்பாக மிகவும் பிரச்சனைக்குரிய பகுதிகளான அகரத்திருநல்லூர், குடவாசல், திருக்கண்ணமங்கை, மணக்கால் அய்யம்பேட்டை, அரசவணங்காடு, அரவூர், வலங்கைமான், எரவாஞ்சேரி, மணவாளநல்லூர், பூவனூர், ஒளிமதி, நீடாமங்கலம், வடகாடு, கோவிலூர் மற்றும் முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் அகரத்திருநல்லூர், காமராஜர் காலணியை சேர்ந்த சின்னையன் மகன் புகழேந்தி (வயது-28). அரசவனங்காடு, வடக்கு தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சதீஷ்குமார் (வயது-36). வலங்கைமான், நார்த்தாங்குடி, வடக்கு தெருவை சேர்ந்த பாலகுரு மகன் ராகுல் (வயது-21). 4.வலங்கைமான், கீழ அக்ரஹார தெருவை சேர்ந்த நந்தகுமார் மகன் அஜய் (எ) அஜய்குமார் வயது-25) . முத்துப்பேட்டை, கோவிலூர், சன்னதி தெருவை சேர்ந்த ஜெயராமன் மகன் குறிஞ்சிவேந்தன் (வயது-48). திருத்துறைப்பூண்டி, கோவிலூர் வடக்கு காட்டை சேர்ந்த செல்வராஜ் மகன் அருண்குமார் (வயது-28). மற்றும் அதே பகுதியை சேர்ந்த நாராயணசாமி மகன் செந்தில்ராஜா ஆகிய ஏழு சரித்திர பதிவேடு குற்றவாளிகள் (HS) குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிறப்பாக செயல்பட்டு 7-சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கைது செய்த உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையிலான தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாரட்டினார்கள். மேலும் இது போன்ற சோதனைகள் அடிக்கடி நடத்தப்பட்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.