சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், சிவகங்கை உட்கோட்டம், சிவகங்கை நகர் காவல் நிலையத்திற்குட்பட்ட சிவகங்கை பேருந்து நிலையம் அருகே தாமோதரன் (9வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர்) என்பவர் பெட்டிக்கடை வைத்துள்ளார். கடந்த (01.10.23)ம் தேதி இரவு 9.50மணியளவில் அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் சேர்ந்துகொண்டு தாமோதரன் பெட்டிக்கடையில் பணம் கொடுக்காமல் சிகரெட் கேட்டுள்ளனர். அதற்கு தாமோதரன் கடையில் வேலை பார்க்கும் கார்த்திகேயன் என்பவர் பணம் கொடுக்காமல் சிகரெட் தரமுடியாது. என கூறியதற்காக கார்த்திகேயனை மேற்படி நான்கு பேரும் சேர்ந்து வாளால் தாக்கியுள்ளனர். அப்போது அதை தடுக்க வந்த அற்புதராஜ் என்பவரையும் வாளால் தாக்கி காயத்தை ஏற்படுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, அதே நாளில் இரவு11.30மணியளவில் அதே நான்கு நபர்கள் சேர்ந்துகொண்டு மேற்படி தாமோதரன் பெட்டிக்கடை அருகே உள்ள வைரமுத்து என்பவரது ஆவின்பால் டீக்கடையை அடித்து நொறுக்கியுள்ளனர்.
மேற்படி தொடர்சம்பவம் தொடர்பாக (02.10.23)ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.B.K.அர்விந்த் I.P.S. அவர்களின், ஆணைக்கிணங்க சிவகங்கை உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.S.சிபிசாய் சௌந்தர்யன் அவர்களின் அறிவுறுத்தலின்படி சிவகங்கை நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.K.கோட்டைச்சாமி தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு.D.ஹரிகிருஷ்ணன் மற்றும் காவலர்களை கொண்டு தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் இன்று (03.10.2023)ம் தேதி சந்தேக நபரான அண்ணாமலை நகர் காலனியைச் சேர்ந்த மகாதேவன் என்பவரை கைது செய்து விசாரித்தபோது, அவருடன் மூவர் இக்குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். என விசாரணையில் தெரிய வருகிறது. மேலும், மகாதேவன் மட்டும் இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மீதமுள்ள 3 குற்றவாளிகளை விரைவில் கைது செய்துவிடப்பட்டுள்ளனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி