திருவள்ளூர் : செங்குன்ற காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுவதால் ஆவடி கமிஷனர் சங்கர் ஐ.பி.எஸ் உத்தரவின் பேரில் செங்குன்றம் துணை ஆணையர் பாலசுப்பிரமணியன் தலைமையில் செங்குன்றம் காவல் மாவட்ட பகுதிகளில் உட்பட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு இருந்த நபர்களின் வீட்டிற்கு அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார். இதில் உதவி ஆணையர் குமரேசன் செங்குன்றம் காவல் ஆய்வாளர் ஜெகநாதன் சோழவரம் காவல் ஆய்வாளர் ராஜ்குமார் ஆகியோருடன் 40க்கும் மேற்பட்ட மகளிர் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தற்போது வரை ஆறு இடங்களில் சோதனை மேற்கொண்டு அவர்களின் பெற்றோர்களிடமும் உறவினரிடமும் துணை ஆணையர் எச்சரிக்கை எடுத்துள்ளார். மேலும் குற்ற சம்பவங்களின் ஈடுபட்டால் குற்ற சம்பளங்களில் ஈடுபடும் நபர்களின் அடைக்கலம் கொடுத்தாலோ சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு