திருவள்ளூர் : ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் படி காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் மீஞ்சூர் காவல் நிலைய சட்ட ஒழுங்கு ஆய்வாளர் காளி ராஜ்,குற்றப்பிரிவு ஆய்வாளர் சுதாகர் மற்றும் அதிவிரைவு படை போலீசார் (ஜெராக்ஸ்)ஐம்பதுக்கு மேற்பட்டோர் அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் அடங்கிய அத்திப்பட்டு புதுநகர் பள்ளம் மேற்கு பகுதியில் வட மாநில தொழிலாளர்கள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் தங்கி சுற்றியுள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர் . இவர்கள் எந்தெந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் எந்தந்த வீடுகளில் தங்கி உள்ளனர். எந்த நிறுவனங்களில் வேலை செய்திருக்கின்றனர்.
என்ற விவரங்கள் ரகசியமாக கண்காணிக்கப்படுகிறது. அவர்களுக்கு பாதுகாப்பு முறைகள் நடவடிக்கைகள் எடுக்க பண்பாட்டு வருகின்றனர். மேலும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள், கஞ்சா வியாபாரிகள், வழிப்பறி கொள்ளையர்கள், கொலை மற்றும் கொள்ளைக்கான திட்டம் தீட்டுபவர்கள் இவர்களின் வீடுகளில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். மேலும் தினமும் தனிப்படை அமைத்து மாறு வேடத்தில் சுமார் 20 க்கும் மேற்பட்ட போலீசார் அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களை கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு