கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் , ஓசூர் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு லாரியில் ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவதாக, ஓசூர் டி.எஸ்.பி.பாபு பிரசாந்துக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ராயக்கோட்டை சாலை அசோகா பில்லர் ரிங்ரோடு அருகே டவுன் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் விழுப்புரம் பகுதியிலிருந்து 17 டன் ரேஷன் லாரி, கர்நாடக மாநிலத்திற்கு கடத்தி சென்றது தெரிய வந்தது. இதை அடுத்து குடியாத்தத்தை சேர்ந்த டிரைவர் ராம்கி (40). என்பவரை போலீசர் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்