கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் சிலர் சாராயம் காய்ச்சி வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.பகலவன் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவருடைய உத்தரவின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் மற்றும் கரியாலூர் போலீசார் இணைந்து அதிரடி சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வாழப்பாடி வனப்பகுதியில் சிலர் சாராயம் காய்ச்சுவதற்காக மூலப்பொருட்களுடன் 17 பேரல்களில் 3,400 லிட்டர் ஊறல் அமைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார், பேரல்களில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சாராய ஊறலை அதே இடத்தில் கீழே கொட்டி அழித்தனர். போலீசார், அங்கு சாராய ஊறல் அமைத்த நபர்கள் யார் என விசாரித்து வருகின்றனர்.