திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் எரியோடு இராமசாமி நகரில் கருப்பையா என்பவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்தார். தற்போது ஊரடங்கு என்பதால் இவர் குடும்பத்தினர் வேலைக்குச் செல்ல
முடியாமல் தவித்தனர். இதனால் இவரும்,இவரது குடும்பத்தினரும் உணவுக்காக வறுமையில் வாடி வந்தனர். அவரது குடும்பத்திற்கு எரியோடு காவல் நிலைய ஆய்வாளர் சத்தியபிரபா ஆலோசனையின்படி அரிசி-25கிலோ மற்றும் மளிகை
பொருட்களை அமைதி அறக்கட்டளை தலைவர் ரூபா பாலன்,திட்ட மேலாளர் சீனிவாசன் ஆகியோர் வழங்கினர்.இதில் ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதநேயத்துடன் உதவிய போலீசாரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.