திருநெல்வேலி : நெல்லை மாநகரில் சிறப்பாக பணிபுரிந்த தனிப்படை போலீசாரை பாராட்டி வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்திய தமிழக காவல்துறை டிஜிபி அவர்கள்.தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர்.
C.சைலேந்திர பாபு, இ.கா.ப., அவர்கள், திருநெல்வேலி மாநகரம் மற்றும் சரகத்திற்குட்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கான காவல் அதிகாரிகளிடம் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் 25-02-2022 ம் தேதியன்று மாலை ஆய்வு கூட்டம் நடத்தினார்கள்.
இக்கூட்டத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள புலன்விசாரணை மற்றும் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை ஆய்வு செய்து மேற்படி வழக்குகளை விரைந்து முடித்து தண்டனை பெற நடவடிக்கை எடுக்கவும், மிக முக்கிய மற்றும் கொடுங்குற்றங்களில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளையும், பிடியாணை நிலுவையில் உள்ள எதிகளையும் சிறப்பு படை அமைத்து விரைந்து கைது செய்யவும் உத்தரவிட்டார்.
மேலும் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து நிலுவையில் உள்ள மனுக்களுக்கு உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்கவும் உத்தரவிட்டார்.
மேலும் போக்குவரத்து விதிகளை உரிய முறையில் செயல்படுத்தி சாலை விபத்து இறப்புகளை தடுக்கவும், தென் தமிழகத்தில் பொது அமைதியை குலைக்கும் போக்கிரிகள் மீதும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர்கள் மற்றும் கஞ்சா குட்கா போதைப்பொருட்களை விற்பவர்கள் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கவும், களவு மற்றும் திருட்டு குற்றங்களை தடுக்க குற்ற செயல்கள் அதிகமாக நடைபெறும் இடங்களை கண்டறிந்து ரோந்து பணிகளை அதிகப்படுத்துவதோடு, கண்காணிப்பு கேமிராக்களை நிறுவி தகுந்ந நடவடிக்கை எடுக்க ஆணையிட்டுள்ளார்கள்.
மேற்படி ஆய்வு கூட்டத்தில் திருநெல்வேலி காவல் ஆணையாளர் திரு.A.T.துரைக்குமார். இ.கா.ப. அவர்கள், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவா; திரு.பிரவேஷ்குமார்.
இ.கா.ப.அவர்கள், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன். இ.கா.ப.அவர்கள், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா; திரு.R.கிருஷ்ணராஜ். இ.கா.ப.அவர்கள், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா; திரு.V.பத்திரிநாராயணன், இ.கா.ப.அவர்கள், மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டார்கள். நெல்லை மாநகர காவல் ஆணையாளர் திரு.A.T.துரைக்குமார் இ.கா.ப அவர்கள், நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் திரு.T.P.சுரேஷ்குமார் அவர்கள்,நெல்லை மாநகர மேற்கு காவல் துணை ஆணையாளர் திரு.K.சுரேஷ்குமார் அவர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
மேலும் நெல்லை மாநகரில் கஞ்சா மற்றும் ரேஷன் அரிசி கடத்தல் செய்த குற்றவாளிகளை கைது செய்ய சிறப்பாக பணியாற்றிய தனிப்படை போலீசாரான காவல் உதவி ஆய்வாளர் திரு.காசிப்பாண்டியன் அவர்கள், தலைமை காவலர்கள் திரு.வேல் சௌத்ரி HC 177, திரு.முருகன் 201, திரு.சண்முகநாதன் 1481, திரு.சண்முகசுந்தரம் HC 1383, திரு.மகாராஜன் 1660, திரு.அய்யாபிள்ளை 1654, திரு.சுரேந்திரன் HC 294, மற்றும் திரு.பொன்மோசஸ் HC 1570 ஆகிய 9 காவல் ஆளிநர்களை மெச்சத்தகுந்த பணியை பாராட்டி வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்தினார்கள்.