விநாயகர் ஊர்வலத்தில் அதிக சத்தத்தில் பாட்டு வைத்ததை தடுக்க முயன்ற போலீஸ்காரர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டம் அகிரிப்பள்ளியில் விநாயகர் விஜர்சன ஊர்வலம் கடந்த 30ம் தேதி இரவு நடந்தது. அப்போது வாகனத்தில் பாட்டு போட்டு கொண்டு இளைஞர்கள் குத்தாட்டம் போட்டபடி சென்றனர். அகிரிப்பள்ளி கான்ஸ்டபிள் கந்தம்நரேந்திரா (34). தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவு வரை அதிக சத்தம் எழுப்பியதால் பாட்டை நிறுத்தும்படி போலீசார், விழாக்குழுவினரிடம் தெரிவித்தனர். அதை ஏற்க மறுத்த சில வாலிபர்கள், போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணா (30). என்பவர் அங்கிருந்த தடியால் போலீஸ்காரர் கந்தம் நரேந்திராவை சரமாரி தாக்கியுள்ளார். இதில் தலையில் படுகாயமடைந்த நரேந்திரா அதே இடத்தில் மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போலீஸ் நேற்று இறந்தார் ராமகிருஷ்ணா வை கைது செய்யப்பட்டு விசாரணை செய்யபடுகிறார்.