கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே ஓசூர் அட்கோ போலீசார் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஆந்திரா மாநிலத்திற்கு சென்று நீண்ட தேடுதலுக்கு பிறகு நாம் தார் உசேனை(33). கைது செய்து ஓசூர் அழைத்து வந்துள்ளனர். கைது செய்யப்பட்ட நாம்தார் உசேன் திருடியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட திருப்பதி மெஜஸ்டிக் என்கிற குடியிருப்ப இடத்திற்கு அழைத்து சென்று செயல் விளக்கமாக விசாரித்தனர். அப்போது, குற்றவாளி நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தில் இருந்த கத்தியை எடுத்து எஸ்.ஐ உட்பட மூன்று போலிசாரை கை,வயிறு உள்ளிட்ட பகுதிகளில் குத்திவிட்டு தப்பியோடி உள்ளார். இதனை அடுத்து இடது கையில் காயம் பட்ட எஸ்.ஐ வினோத் தான் வைத்திருந்த துப்பாக்கியால் குற்றவாளியை வலது கால் முட்டிக்கு கீழ் சுட்டு மடக்கி பிடித்தனர். காயம் அடைந்த போலீசார் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதேபோல வலது காலில் குண்டடிபட்ட நாம்தார் உசேனுக்கு ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்