கோவை : கோவை மாநகர ஆயுதப்படை போலீசாருக்கு 2023-ம் ஆண்டிற்கான வருடாந்திர அணிவகுப்பு பயிற்சிகள் போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த பயிற்சி போலீஸ் கமிஷனர் திரு.பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் ஆயுதப்படை துணை கமிஷனர் திரு.சேகர் மேற்பார்வையில் வருடாந்திர பயிற்சியாக ஆயுதபடை போலீசாருக்கு யோகா துப்பாக்கி சுடுதல் பொதுமக்களிடத்தில் அணுகுமுறை, பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்படுவது போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும். மொத்தம் 550 மாநகர போலீசாருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. ஆயுதபடை போலீசாருக்கு துப்பாக்கிகளை எவ்வாறு கையாளுவது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்