குமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.திரு.இரா.ஸ்டாலின் IPS அவர்கள் குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடித்து தண்டனை பெற்றுத் தருவதற்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 29.07.2018 அன்று குளச்சல் சைமன் காலனியை சார்ந்த லூயிஸ் என்பவரின் மகன் எல்லூஸ் 55. என்பவர் 9 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு நாகர்கோவில் POSCO சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் நீதிபதி திரு.சுந்தரையா அவர்களால் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பின்படி குற்றவாளியான எல்லூஸ் என்பவருக்கு 15 வருடம் கடுங்காவல் தண்டனை மற்றும் 6000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
விசாரணைக்கு உறுதுணையாக இருந்த ஆய்வாளா் திருமதி.சாந்தகுமாரி, தலைமைக்காவலா் திருமதி.வெங்கடேஸ்வரி மற்றும் கன்னியாகுமரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் திரு.மகேஷ் குமார் ஆகியோருக்கு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டுகள் தெரிவித்தாா்கள்.