மதுரை : கொரோனா வைரஸ் நோய் தொற்றால் போலீசாரும் பாதிப்படைவதால், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன்.இ.கா.ப. அவர்கள் காவலர்கள் அனைவரின் நலன் கருதி, பணியின் போது,
அனைவரும் முகக்கவசம், Face visor மற்றும் கையுறை கட்டாயம் அணிய வேண்டும். அடிக்கடி சானிடைசர் கொண்டு கைகளை கழுவ வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
மேலும், தினமும் காவல்நிலையத்தின் உள்ளேயும், வெளியேயும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.