திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது .பலஇடங்களில் மரங்கள் முறிந்தன. இந்த மரங்களை அப்புறப்படுத்திய போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். திண்டுக்கல் நகரில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது.
இந்த இந்தக் காற்றால்,ஆர்.எம்.காலனி எம்.வி.எம் .நகர் உட்பட பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது .
தகவலறிந்த திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் குமார், காவலர் ராமச்சந்திரன் ஆகியோர் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்த இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்பகுதியில் இளைஞர்களுடன் ஒன்றுசேர்ந்து முறிந்த மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர். உடனடியாக போக்குவரத்தை சரி செய்தனர். மழையையும் பொருட்படுத்தாது மரக்கிளையை வெட்டி போக்குவரத்தை சீராக்கிய போலீசாரை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா