கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனை சமாளிக்கும் வகையில் போக்குவரத்து போலீசாருக்கு தெர்மாகோல் தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று கிருஷ்ணகிரி ஐந்து ரோடு ரவுண்டானா அருகே நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி காவல் துணை கண்காணிப்பாளர் முரளி தலைமை வகித்தார். இதில் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. தங்கதுரை கலந்து கொண்டு போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் மற்றும் மோர் ஆகியவற்றை வழங்கி உரையாற்றினார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்