திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கால் போலீசார் சுறுசுறுப்பாக பணியாற்றுகின்றனர். அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்கு பின்பே விடுவிக்கப்படுகிறது.
இந்நிலையில் பணியாற்றும் போலீசாரை உற்சாகப்படுத்தும் விதமாக, ஆய்வு நடத்தி அவர்களுக்கு செல்லுமிடங்களில் டீ ,பிஸ்கட் வழங்கி, அவர்கள் பணியை எஸ்.பி.ரவளிபிரியா ஊக்கப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் திண்டுக்கல்லில் கண்காணிப்பாளர் ரவளிபிரியா கலந்துகொண்டு 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு தேனீர், சிற்றுண்டி மற்றும் முககவசங்களை வழங்கினார்.
இதில் டவுன் டிஎஸ்பி மணிமாறன், அணில் புட்ஸ் நிர்வாக இயக்குனர் கமலஹாசன், முதன்மை நிர்வாக இயக்குனர் யுவராஜ் பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எஸ்.பி.கூறியதாவது: போலீசார் ஆரோக்கியத்துடன் இருந்தால் தான் சிறப்பாக பணியாற்ற முடியும். ஆகவே மன உளைச்சல் இல்லாமல் தினமும் யோகா மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நம் உடல் ஆரோக்கியத்தை காக்க வேண்டும். தினமும் சத்தான உணவுகளை உண்ணவேண்டும், என்றார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா