திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திரு.சங்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஆரணி நகராட்சி சுகாதார ஆய்வாளர் திரு.மதனரசன் தலைமையில் களப்பணியாளர்கள் போலீஸ் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தனர்.
மருத்துவ அலுவலர் டாக்டர் திரு.செந்தில்குமார் தலைமையில் மருத்துவக் குழுவினர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) திரு.ரூபன் குமார், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் திரு.தருமன், திரு.ரகு, திரு.கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திரு.பழனிவேல் உள்பட அனைத்துப் போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்