திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரவளி ப்ரியா திண்டுக்கலில் உள்ள காவல் நிலையங்களைஆய்வு செய்தார். அங்கிருந்த காவல் அதிகாரிகளும், காவல்துறையினரும் பொதுமக்களிடம் கண்ணியமிக்க முறையில் நடந்துகொள்ள வேண்டும்.
பொதுமக்களிடம் அன்பாகவும், நல் உறவாகவும் பழக வேண்டும் என்பது குறித்தும், அறிவுரைகளை எடுத்துக் கூறினார். அப்போது அவர் கூறியதாவது: எவ்வளவு நேரம் வேலை பார்க்கிறோம் என்பது முக்கியமல்ல. எப்படி வேலை பார்க்கிறோம் என்பது தான் முக்கியம். பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தான் நம்மிடம் வருகிறார்கள்.
நாம் பிரச்சினைகளை உருவாக்கக் கூடாது. அதேநேரத்தில் பொதுமக்களிடம் அன்பாகவும் ,நட்பாகவும் ,நல்லுறவும் இருந்தால் நம்மை தேடி அனைத்து தகவல்களும் வரும் .போலீசார் வேகத்தை காட்டுவதை விட ,விவேகத்தை காட்டவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.