கோவை: திமுக தலைவரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணைகிணங்க ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலமாகவும், செம்மொழி அரிமா சங்கத்தின் சார்பாகவும் காலநேரம் பாராமல் இரவு பகலாக பணியாற்றும் காவல் துறைனருக்கு கொரோனா பேரிடர்காலத்தில் அவர்களின் பாதுகாப்பை கருதி முக கவசம், சானிடைசர், ஹேண்ட் வாஷ், நீராவி இயந்திரம், ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு செம்மொழி அரிமா சங்கத்தின் பட்டைய தலைவரும் திமுக பொறியாளர் அணியின் முன்னாள் துணை அமைப்பாளர் ஆர்.எஸ்.இலட்சுமிராஜா தலைமை வகித்தார். சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் திருப்பதியிடமும் கோவில்பாளையம் ஆய்வாளர் ஜீவராஜ் மணிகண்டன் இடமும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சரவணம்பட்டி முன்னாள் பகுதி கழக செயலாளர் சா.மாணிக்கம்,முன்னாள் கவுன்சிலர் மற்றும் பகுதி செயலாளர் எஸ் .பி. இலட்சுமணன்,மயில் மார்க் செந்தில்குமார், வி.விஜய் ஆனந்த், ஜல்லி கட்டு பாபு, லோகு, சுரேஷ்,விஜய், ராஜேஷ், ரெட்டி, சதானந்தம் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.