செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அடுத்த தென்மேல்பாக்கம் கிராமத்தில் காப்புக் காடுகளுக்கு இடையே தனியாருக்கு சொந்தமான மருத்துவ கழிவுகள் எரியூட்டும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு சென்னை பெருநகர காவல்,தாம்பரம்,ஆவடி மாநகர காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் இங்கு கொண்டு வந்து எரித்து அழிப்பது வழக்கம். இங்கு, வடக்கு மண்டல காவல்துறை எல்லைக்கு உட்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் , இராணிப்பேட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இருந்து 668 கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 1,902 கிலோ கஞ்சா பொருள்கள் கொண்டுவரப்பட்டது.
விழுப்புரம் மண்டல டி. ஐ. ஜி., அருளரசு,வேலூர் மண்டல டி. ஐ. ஜி.,தர்மராஜ், காஞ்சிபுரம் மண்டல டி. ஐ.ஜி. செஷாந்த்சாய் ஆகிய மூன்று டி. ஐ. டி.,க்கள் முன்னிலையில் கஞ்சா மூட்டைகள் எடை சரிபார்க்கப்பட்டு தீயிட்டு அழிக்கப்பட்டது. இதில் செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். அழிக்கப்பட்ட கஞ்சா பொருள்களின் மதிப்பு 2 கோடி ரூபாய் இருக்கும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்
















