கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அந்தேவனப்பள்ளி கிராமத்தில் உள்ள சாந்தி கிளினிக்கில் ஆங்கில மருத்துவம் படிக்காமல் தான் ஒரு டாக்டர் என கூறி அலோபதி மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொண்டு சிகிச்சை அளிப்பதாக தேன்கனிக்கோட்டை முதன்மை மருத்துவர் அவர்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் தணிக்கை குழுவுடன் அங்கு சென்று எதிரிகளின் மெடிக்கல் கடையை தணிக்கை செய்த போது குற்றவாளி MBBS படிக்காமல் அலோபதி மருத்துவம் பார்த்து வந்தது கண்டறியப்பட்டு. மேற்படி முதன்மை மருத்துவர் காவல் நிலையம் வந்து போலி மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.