திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர காவல் சரக பகுதிகளில் சட்டவிரோதமாக போலி மதுபாட்டில் தயார் செய்து விற்பனை செய்த குற்றவாளிசத்தியமூர்த்தி 41.என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்திரு.C.விஜயகுமார் IPS அவர்கள் தனிப்படை அமைத்து
கைது செய்து சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்டார்கள்.
இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரை மற்றும் அதிரடி நடவடிக்கையின்பேரில் மேற்படி குற்றவாளி சத்தியமூர்த்தியை இன்று (07.12.2021) குண்டர் சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேற்படி குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சிறப்பாக பணிபுரிந்த மன்னார்குடி நகர காவல் காவல் ஆய்வாளர் திரு.விஸ்வநாதன் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அந்தோணி ராஜா